சிறைவாசம் :நீடிக்கிறது?



கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளது சிறைவாசம் தொடர்கின்றது.பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 04 தேரர்கள் மற்றும் மேலும் 06 பேரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதாகியுள்ள பத்துபேர்களது சிறைவாசம் தொடரும் நிலையில் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையே தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments