வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்
வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
கல்வி என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும் ஆனால் வடமாகாணத்தில் கல்வியைப் பொறுத்தவரை அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன.
வடமாகாணத்தில் உள்ள அரசியல் உயர் மட்டங்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி செயலாளர்கள் மாகாண பணிப்பாளர்களை நியமிக்கின்றனர். இது முற்றாக மாற்றப்பட வேண்டும் .
அத்துடன் கல்வி மாற்ற கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம் தற்பொழுது அதில் ஒரு சந்தேகம் காணப்படுகின்றது . மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. அதனை அரசாங்கம் சரியான முறையில் புரிய வைக்க வேண்டும் அதன் பின்னர் புதிய கல்வி சீர்திருத்த கொள்கை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என தெரிவித்தனர்.

Post a Comment