நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!
யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.
சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிங்கள வீட்டுத் திட்டங்கள் தற்போது யாழில் வழங்கப்படுவதாகவும், அதனை நினைத்தபடி விற்பனை செய்வதாகவும் தமிழ் மக்கள் பலர் வீடுகள் இன்றி இன்றும் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
அதற்கு பதில் வழங்கிய இளங்குமரன், காணி உறுதிப்பத்திரம் வழங்கிய பின்னர் அதனை விற்பனை செய்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குள் செல்வது சாத்தியம் அற்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனிடையே நாவற்குழியில் வீட்டுத்திட்டங்களை பெற்ற சிங்கள குடியேற்றவாசிகள் அவற்றினை வேறு சிங்களவர்களிற்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Post a Comment