சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.போராட்டத்தில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசு கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
"கொக்கச்சான்குளம்" என்ற தமிழ் கிராமம் "கலாபோகஸ்" என பெயர் மாற்றப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக முண்டு கொடுத்த ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் கொக்கச்சான்குளம் கலாபோகஸ்வெல என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்த கொக்கச்சான்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதி பெற்று தருவதாக கூறி சிங்கள மக்களுக்கு; காணி உரிமம் பெற்றுக் கொடுக்கப்பட்டதற்கு தமிழரசுக்கட்சியே ஆதரவளித்ததெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Post a Comment