மாகாணசபை தேர்தல்:வீடு மீண்டும்!
மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி; உட்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான முதற்கட்டப் பேச்சுக்கள் நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்ற தேர்தல்களில் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டதால் மீண்டும் கூட்டமைப்பை முன்னுக்கு நிறுத்த கட்சிகள் முயற்சித்துள்ளன.
வீட்டுச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னாள் கூட்டமைப்புக் கட்சிகள் இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை கூட்டில் இணைப்பது தொடர்பில் முடிவேதும் எட்டப்பட்டதாக தெரியவில்லை.
முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட முனைப்புக் காட்டியிருக்கும் சூழலில் தனது முடிவிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் பின்வாங்க தயாராகியிருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Post a Comment