அசாத் சாலியின் காணியை மோசடி செய்த ரவி கருணாநாயக்க ?


ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள 150 மில்லியன் ரூபா பெறுமதியான தமது காணியை மோசடியான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைப்பற்றியுள்ளதாக அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பில் ஏற்கனவே குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதுடன், நேற்று இது தொடர்பான விசாரணைகளுக்காக சி.ஐ.டி. விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனினும், மூன்றாம் தரப்பினரைக் கொண்டு அங்கு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இம்முறை இடம்பெறும் விசாரணைகள் மூலம் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்  என அவர் தெரிவித்துள்ளார். 

No comments