குடும்பத்துடன் வீட்டிற்கு தீ வைப்பு - தந்தையும் மகளும் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் குடும்ப தகராறை அடுத்து குடும்பத்துடன் சேர்ந்தது வீட்டிற்கு தீ வைத்தவரால் , தீ வைத்தவரும் , அவரது மகளும் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் , அவரது மனைவி , அவர்களின் மேலும் இரு பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலென் பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவி அவர்களின் மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறை அடுத்து , கணவன் வீட்டினை பூட்டி , குடும்பத்துடன் பெற்றோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார் .
அதன் போது , கணவனும் அவர்களது 13 வயதான சிறுமியும் தீயில் கருகி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் இருந்த அவரது மனைவி , மேலும் இரு பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment