யாழில். சட்டவிரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்ட கட்டுதுவக்கு வெடித்ததில் இறால் பிடிக்க சென்றவர் படுகாயம்


யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள சிறுகடலில் இறால் பிடிப்பதற்காக சென்ற கேவில் பகுதியை சேர்ந்த கருப்பையா பத்மநாதன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். 

குறித்த நபர் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழமை போன்று தனது தொழிலுக்கு சென்ற வேளை அப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடும் நோக்குடன் , பொறுத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிசசைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 





No comments