திலீபன்:திருகோணமலையில் கலக்கம்!



தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் திருக்கோணமலையில்  தியாக தீபம் திலீபனின் திருஉருவப்படம் இலங்கை காவல்துறையினால் பலாத்காரமாக அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம் பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை நினைவுப்படம் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. 

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு  வந்தது. 

இந்நிலையில்   திருகோணமலையில் காவல்துறை அதிகாரிகளால் குறித்த நினைவு படத்தை முறையற்ற விதத்தில் அகற்றியுள்ளனர்.

முன்னரும் திருகோணமலையினுடாக பயணித்த தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments