கண்ணீர் காவியம்:மகிந்த –கோத்தா சந்திப்பு!



வதிவிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய நேரில் சென்று நலன்விசாரித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். 

ஏற்கனவே மகிந்தவை கட்சி ஆதரவாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டுவருகின்றனர்.ஆயினும் ஆட்களை அழைத்து பார்வையிட தனக்கு விருப்பமில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நையாண்டி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments