காங்கேசன்துறை துறைமுகம் :அபிவிருத்தி சாத்தியமில்லை!



காங்கேசன்துறை துறைமுத்தின் அபிவிருத்திகள் சாத்தியமற்றதென அமைச்சர் விமல் ரட்ணாநாயக்கா தெரிவித்துள்ளார்.

யாழ் காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலுவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறை முகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை.அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சிவஞானம் சிறிதரன் இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கேட்டிருந்தார். 

பதில் வழங்கிய அமைச்சர் இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார் நாங்களும் பேசியுள்ளோம் ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.


No comments