செம்மணி பக்கம் அனுர எட்டிப்பார்க்கவேயில்லை!



செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கியுள்ளன.இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள் செம்மணியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில்  198 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே செம்மணி புதைகுழிக்கு செல்லவுள்ளதாக பிரச்சாரப்படுத்தப்பட்ட இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அப்பக்கம் எட்டிக்கூடபார்த்திருக்கவில்லை.

எனினும் செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதைகுழி விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில்  முன்னதாக செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடலாம் என இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்திருந்தார்.

எனினும் செம்மணி புதைகுழிக்கு செல்வது தொடர்பில பிரச்;சாரப்படுத்தப்பட்ட போதும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அதனை கண்டுகொள்ளவில்லை.


No comments