செம்மணியில் குவியல் குவியலாக எலும்புகள் - சான்று பொருட்களும் மீட்பு


செம்மணி மனித புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை வட்ட வடிவான தாயத்து ஒன்றும், மோதிரம் என சந்தேகிக்கப்படும் வட்ட வடிவான ஆபரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குவியலாக உள்ள எலும்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால், அவற்றினுள் முழுமையான எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும், அவற்றை முழுமையாக அகழ்ந்து எடுத்து பின்னரே அவை தொடர்பில் தெளிவாக கூற முடியும் என கூறப்பட்டுள்ளது

No comments