சீ.வீ.கே.சிவஞானம் மட்டும் அனுரவை வரவேற்றார்!
யாழ்ப்பாணத்திற்கான ஐனாதிபதி பயணத்தின் போது அரச தரப்பு அல்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக புறக்கணித்துள்ளனர்.எனினும் தமிழரசு தலைவர் சீ,வீ.கே.சிவஞானம் மட்டும் மாவட்ட செயலக நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதேவேளை சுற்றுச்சூழலியர்களது எதிர்ப்பினை தாண்டி யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01)ஆரம்பித்து வைக்கப்படடுள்ளது
வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மைதானம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 3 வருடங்களில் மண்டைதீவில் சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்படடுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment