கச்சதீவை அனுர தரமாட்டாராம்!



இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்,

இலங்கை கடற்படை கப்பலில் கச்சதீவுக்கு இன்று மாலை விஜயம் செய்வதுள்ளார்.

அதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் கருத்து வெளியிடுகையில் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை கொணடுள்ளது.கடற்றொழில் சமூகங்களுக்கு கச்சத்தீவின் மூலோபாய மற்றும் உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை கொண்டது.

"கச்சத்தீவு நமது மீன்பிடி சமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தீவு தொடர்பில் பெரிய பொது விவாதம் எழுந்துள்ளது, இன்று அங்கு கடற்றொழிலாளர்களை சந்திக்க விரும்புகிறேன். 

நமது தீவுகள், நமது கடல் நமது வானம் அல்லது நமது நிலம், அவை நமது மக்களுக்குச் சொந்தமானவை. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்

எனவே, எந்த வகையான வெளிப்புற அழுத்தத்துக்கு நாங்கள் அடிப்பணியமாட்டோம்" என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடிகர் விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


No comments