நியூசிலாந்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்
நியூசிலாந்தில் 16வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் May 18 மாலை 6.30 மணிக்கு Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042)
நூற்றுக்கணக்கான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது, பல்வேறு அமைப்புகள் பிரதிநிதிகள் சகிதம் இந் நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு மற்றுமோர் நீதிக்குரலாகஅமைந்திருந்தது .
இந்தஉணர்வு பூர்வமான நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாகமுதலில் பொது சுடரினை திரு. சுந்தர்ராஜன் அவர்கள் ஒளிர்வித்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசிய கொடியானது திரு.தயாகரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழீழ தேசிய கொடியானது வீரவேங்கை மேஜர் செஞ்சுடர் அவர்களின் சகோதரி தவலோஜினி அவர்களால் ஏற்றிவிக்கப்பட்டது.
ஈகைசுடரினை2ம் லெப்டினன்ட் அன்பரசி அவர்களின் சகோதரன் அனுசன் ஏற்றி வைக்கஅதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில்உயிர்நீத்த அனைவருக்காகவும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வின் தொடர்ச்சியாக அரங்க நிகழ்வுகள் யாவும் மிக எழுச்சியுடன் நடந்தேறியது.
பின்னர் நியூசிலாந்து தேசிய கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடியிறக்கம் நடைபெற்றது.
பின்னர் நிகழ்வின் இறுதியாக 2009 பேரவலத்தின் போது எம்மக்களின் சீவனை காத்த கஞ்சி வழங்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் தமிழர்இனவழிப்பு நாள் May 18 (2025) நிறைவுற்றது.
Post a Comment