அலெப்போ நகரிலிருந்து பின்வாங்கியது சிரியப் படைகள்
சிரியாவில் உள்ள கிளர்ச்சிப் படைகள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளன என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு (SOHR) தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக சனிக்கிழமை வரை அலெப்போவின் சில பகுதிகளில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை தொடங்கிய தாக்குதலில் இருந்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக SOHR தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக சிரிய அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் மற்றும் 2016 இல் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகளை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போவை அடைந்தது முதல் முறையாகும்.
சிரியாவின் இராணுவம் இன்று சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் நகரின் பெரிய பகுதிகளுக்கு நுழைந்ததை உறுதிப்படுத்தியது மற்றும் சண்டையில் டஜன் கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.
சிரிய அரச படைகள் எதிர் தாக்குதலைத் திட்டமிடுவதற்காக தற்காலிகமாக அலெப்போவில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதாக அரசாங்கத் தரப்பு கூறியது.
அலெப்போவின் விமான நிலையம் மற்றும் நகருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க எதிர்ப்பைச் சந்திக்காமல் நகரத்தின் பெரும்பகுதியை கைப்பற்ற முடிந்தது சனிக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான சிரிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
சிரிய ஆட்சிப் படைகள் வெளியேறியதால் சண்டை இல்லாமல் கிளர்ச்சிப் படைகள் நுழைந்தன.
அரசாங்கத் தரப்பு நகர சபை, காவல் நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு வெறுமையாகக் காணப்படுகின்றன.
Post a Comment