கொழும்பில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் மீட்பு!
கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பற்றுச்சீட்டு இல்லாமல், எந்தத் தகவலும் குறிப்பிடப்படாமல் சந்தையில் விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த மஞ்சள் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது
இந்த மஞ்சள் தொகை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment