இஸ்ரேலின் வான்படைத்தளம் மற்றும் மொசாட் தலைமையகம் ஈரானின் தாக்குதலின் இலக்கு!!


இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தாக்குதல் குறித்த விடயங்களை ஈரான் அமெரிக்காவிடம் அறிவித்ததாக

ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் இஸ்ரேலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்றும். தாக்குதல் இலக்குகள் அனைத்தும் இராணுவமே என்று ஈரான் அறிவித்தது.

குறிப்பாக மொசாட் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏவுகணை ஒன்று 30 மீற்றர் தொலைவில் விழுந்து வெடித்ததில் சேதங்கள் ஏற்பட்டுள்ளனர். விழுந்து இடத்தில் பேரிய குழி ஏற்பட்டது.

இதேபோன்று இஸ்ரேலின் எரிவாயு நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

டெல் அவிவில் அமைந்துள்ள இஸ்ரேலின் பலம் பொருந்திய வான்படைத் தளமாக நோஃப் ஏர்பேஸ் மீதும் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இதனால் அங்கு தரித்து நிறுத்தப்பட்ட போர் விமானங்களும் கடுமையான சேதமடைந்ததாக ஈரான் செய்கோள் படங்களை வெளியிட்டது.

No comments