14:மீளக்கூடுவதா? இல்லையா?-குழப்பத்தில் தமிழரசு!
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் கூட்டப்படுமா இல்லையாவென்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட தமிழரசுக் கட்சியின் குழு இன்று கூடியபோது 14ம் திகதி மீளக்கூடி தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னதாக எம்.ஏ.சுமந்திரன் தரப்போ மீண்டும் 14ம் திகதி கூட தேவையில்லையென அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
அத்தீர்மானம் இன்றைய கூட்டத்தின் போது உறுதிசெய்யப்பட்டதாகவும் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்களை அமுலாக்குவதற்கான கால வரையறைகள் குறித்து கலந்துரையாடி இறுதி செய்யவும் தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னதாக தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் கூடியுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. சிறீPதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment