கொழும்பில் கண்டறியப்பட்டவை யாருடைய புதைகுழிகள்!
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் உச்சமடைந்துள்ள நிலையில் கொழும்பு பெருநகரின் உயர் பாதுகாப்பு வலையத்தில் பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளது மூத்த போராளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் தென்னிலங்கை இரகசிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்திருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி மண் தோண்டும் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்படடுள்ளன.
அதனையடுத்து, புதுக்கடை நீதவான் முன்னிலையில், கடந்த ஐந்தாம் திகதி புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை அகழ்வாராய்ச்சி செய்த தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா பாரிய புதைகுழியில் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும் மனித புதைகுழியின் வயது குறித்து இதுவரை எதுவும் ஊகிக்க முடியாதுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே 1988 மற்றும் 89 காலப்பகுதிகளில் காணாமல் போனவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஒரு தகவலும் இறுதி யுத்தத்தில் சிறைப்பிடித்து வரப்பட்ட தமிழர்களது என இன்னொரு தகவலும் தெரிவித்துள்ளது.
Post a Comment