ஆட்களை தேடும் மேடைகள்!




ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ரணிலின்றி கிளிநொச்சி நகரப்பகுதியில்  பசுமைப்பூங்காவில் ஈபிடிபி தரப்பின் ஆதரவில் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னராக ஈபிடிபி தனது முதலாவது கூட்டத்தை சகபாடியான சந்திரகுமார் அற்ற  நிலையில் நடத்தியுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி வேட்பாளரான அரியநேந்;திரனின் ஆதரவு கூட்டமொன்று வடமராட்சி மாலிசந்தி பகுதியில் மிகக்குறைவான ஆதரவாளர்கள் சகிதம் நடந்துள்ளதனை தமிழரசு எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணி வெளிப்படுத்தியுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம், வடமராட்சி - உடுப்பிட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் ஏற்பாட்டாளர்கள் தோல்வி கண்ட நிலையில்; கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதே மைதானத்தில் ரணில் விக்கிரமசிங்க சகிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் முன்னதாக கூட்டமொன்றை கூட்டியிருந்தார்.

அவரிற்கு போட்டியாக அங்கயனின் சிறிய தந்தையாரான தொழிலதிபர் இன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நடாத்தவிருந்த கூட்டமே இரத்தாகியுள்ளது.




No comments