வியாழேந்திரன் உதவியாளர்கள் சிறை நீளுகின்றது!



மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க 15 இலட்சம் ரூபா கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் சுமார் ஒன்றரை மாதங்களாக விளக்கமறியலில் உள்ளதால் அவர்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்து, சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments