அடுத்த பிரதமர் சஜித்:அரசியல் வேண்டாம் -ரணில்



நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக அவர் தொடர்ந்து செயற்படுவார் என தெரியவருகின்றது.

இதனிடையே எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ‘ஐக்கிய மக்கள் சக்தியின்’ பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து தனக்குக் கிடைத்த ஆதரவை ஒப்புக்கொண்ட அவர், இலங்கையின் முன்னேற்றத்திற்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

"என்னை நம்பியதற்கு அனைவருக்கும் நன்றி, தகுதியான எதிர்காலத்திற்காக போராடுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்," என்றும் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.


No comments