நான் தப்பியோடவில்லை:பி.எஸ்.எம். சார்ள்ஸ்!

 


ஊழல் மோசடிகள் தொடர்பில் புதிய அரசின் கைதிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேற முற்பட்டதாக தன்மீது பொய்தகவல்கள் பகிரப்படுகின்றமை தொடர்பில் வடமாகாண முன்னாள் ஆளுநர் சார்ள்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு வடக்கு ஆளுநரும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக வெளியேற முற்பட்ட போது திருப்பியனுப்பப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தன.

இதனிடையே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் பதவி விலகியுள்ளதாக தெரியவருகின்றது.

அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு  தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களும்  தங்களது பதவி விலகல்கள் குறித்து அறிவித்துவிட்டனர்.

முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்திருந்தார்.

இதனிடையே இலங்கையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையத்திற்கு சென்ற போதும், குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேருடைய பெயர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


No comments