திரும்பினார் அரியம்:நாடாளுமன்ற தேர்தலிற்கு தயார்!



எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடமாட்டேனென உறுதியளித்து புறப்பட்ட ஜனாதிபதி தேர்தலிற்கான தமிழ் பொதுவேட்பாளர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிட்ட பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான அரசியல் சேவையை தொடர வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் எந்தவிதமான சுயநலனும் இல்லாமல் தமிழ் தேசிய எழுச்சியின்பால் கொண்ட பற்றுறுதியின் காரணமாக பா.அரியநேத்திரன் இந்த தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்தார்.அது தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான ஒரு விழிப்புணர்வையும் அணிதிரட்டலையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அரியநேத்திரனின் தமிழ் மக்களுக்கான அரசியல் சேவை தொடர வேண்டும். அது தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிட்ட பா.அரியநேத்திரன் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கில் பொதுக்கட்டமைப்பின் சார்பில் போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments