ரணில் பின்னடைகிறாரா??



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தோல்வியடையக் கூடும் என கருத்துக் கணிப்புகளில் பரவலாக வெளிவந்தவண்ணமுள்ளது.

அவ்வாறு தோல்வியடையும் நிலைமை உருவாகுமானால் நாடாளுமன்றத்தை கலைக்க ரணில் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் இணைவு நடைபெறலாமென கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல் இணைவு ஏற்பட வாய்ப்பில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.

"ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் இணைவு நடைபெறவுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மைக்குப் புறம்பானது. எங்கள் வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் அத்தகைய ஒரு அவசியம் எமக்கு இல்லை." என்றும்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதி விக்கிரமசிங்க சில நபர்களால் அவரது தோற்றத்தை மாற்றும் அளவிற்கு தூண்டப்பட்டுள்ளார்" என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments