ரணில் வெற்றிக்கூட்டத்தில் ஆமி

 


எதிர்காலத்தை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் இலங்கை படையினர் பங்கெடுத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்  இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களின்  முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும்  விசேட கூட்டம்  முன்னாள் கல்வி,இராஜாங்க மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான  விஜயகலா மகேஸ்வரன் தலைமையில்   இன்று இடம் பெற்றது

வடபுலத்தில் இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்கள்தடையேதும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்துநடவடிக்கைகளும் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய கூட்டத்திலேயே பாதுகாப்பு படையினர் பங்கெடுத்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.


No comments