வாய்ச்சவடால் மட்டுமே இவர்களிற்கு தெரியும்
தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் உணர்வை அறிந்து அரசியல் செய்ய தெரியாத முடியாதவர்களால் வெறுமனே போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கவும் பத்திரிக்கைக்கு அறிக்கை விடுவதற்கு மட்டுமே இலாயக்கானவர்கள் என சாடியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்.
பொது வேட்பாளர் பட்டியலில் கடைசி வரை பெயரிந்தவரும் இறுதி யுத்த சாட்சியுமான அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
கடந்த ஆறுமாதங்களாக ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் ஒருவரை தேடி அலைந்து ஒருவாறாக ஒருவரை முன்மொழிந்து கடைசியாக ஐந்து பேர் கைச்சாத்திட அரியனேந்திரனை தெரிவு செய்து விட்டு இப்போது ஆளுக்கொரு திசையில் சஜீத்தோடும் ரணிலோடும் ஒப்பந்தம் செய்ய ஒரு வாரத்திற்குள் போட்டி போட்டு புறப்பட்டிருப்பதானது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாகும்.
பொதுவாக தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னர் தமிழ்மக்களின் உணர்வுகளையும் அவர்களது அபிலாசைகளையும் கேட்டறிந்து கொள்ளல் அவசியமாகும்.
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களும் சமஸ்டியும் மாகாண சபையும் தமிழ் மக்களை ஏமாற்ற கண்களுக்கு தெரியும் இவர்களுக்கு ஏனைய காலத்தில் மட்டும் உரியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த தைரியம் இல்லாதது ஏன்....? காலம் அறிந்து பயிர் செய்யாதது ஏன்.....?
அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா காலம் தொட்டு மைத்திரி காலம் வரை வாய்மொழி பேச்சுவார்த்தைகள் மட்டுமே எமது தலைமைகளால் நடந்தேறி வருகிறதே ஒழிய தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வொன்று இதுவரை எட்டப்பட்டதாக தெரியவில்லையென போட்டுடைத்துள்ளார்.
Post a Comment