ஊடகங்களில் இலக்கத்தகடு விபரம்!

 




முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில் மரணித்த முன்னாள் போராளிகளை அடையாளங்காண சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்ட இலக்கத்தகடுகளை காட்சிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இதுவரை 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அகழ்வின்போது எடுக்கப்பட்ட 25 எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியப் பிரிவிற்கு இடம்மாற்றப்பட்டு கடந்த 2ஆம் திகதி முதல் ஆய்வுகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. எதிர்வரும் வாரங்களிலும் தொடர்ந்து இடம்பெறும். சட்ட வைத்திய நிபுணர்களின் முழுமையான அறிக்கைககள் ஆறு மாதங்களுக்குள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.”

எலும்புக்கூடுகளின் காலப்பகுதியை அறிந்து கொள்வதற்கு இலகுவாக, அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட இலக்கத் தகடுகளின் இலக்கங்களை பத்திரிகையில் வெளியிடுமாறு, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.


No comments