கருணா பிள்ளையான் மீண்டும் உள்ளே?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கியதாக அரசின் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தேசிய் மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
இந்திய அமைதிப்படை காலமாக 1988 ஆம் மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் விடுதலை புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கியதாக பிள்ளையான என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனிடையே கருணா, பிள்ளையான் போன்றோரை இணைத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது , ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, பிள்ளையான் செயல்படுகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, பிள்ளையான் மற்றும் கருணா போன்றோரை இணைத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நிறுத்த முடியாது .
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment