பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் தொடங்கியது: வெல்லப் போவது யார்?


பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மக்களும் மிகவும் ஆர்வமாக வாக்களித்து வருக்கின்றனர்.

தேர்தலானது இன்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கியது. வாக்குப் பதிவு இரவு 10 மணி வரை தொடரும். வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கைகள் எண்ணத் தொடங்கும். இறுதி முடிவுகள் நாளை வெளியாகும்.

மொத்தம் 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளில், 326 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும். எந்த கட்சியாலும் பெரும்பாண்மை பெற தவறிவிட்டால், தற்போதைய பிரதமர் ஆட்சியில் தொடரவேண்டும். 

பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்சதா மூர்த்தியுடன், நார்த் யார்க்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். 

கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாளர் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது. 

இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

1997இல் முன்னாள் தலைவர் டோனி பிளேர் 18 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, தொழிலாளர் கட்சி பெற்ற சாதனையான 418 இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, கன்சா்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


No comments