சம்பந்தன் பூதவுடல் வன்னி செல்லாது!
தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவூடல் இலங்கை விமானப்படையினரின் அஞ்சலியின் பின்னரா யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்தது.
சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிற்கிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனிடையேஇறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07), திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார்.
அதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அது தொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார்.
Post a Comment