ரணில் துரோகியே: சஜித்!

 


ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப்போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்சஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லையென சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

தனது வடக்கு பயணத்தின் இறுதி நாளான இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் ஊடகவியலாளர்களிடையே கேள்வி களிற்கு பதிலளித்திருந்தார்.

ரணிலை ஜனாதிபதியாகவும் தங்களை பிரதமராகவும் கொண்ட அரசியல் கூட்டொன்றை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுவதை முற்றாக மறுதலித்த சஜித் பிறேமதாசா மீண்டும் மீண்டும் அது இது தருவாக சொல்லப்படும் அரசியலை ரணிலுடன் இணைந்து முன்னெடுக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.


No comments