சுமாவுடன் அவசர சந்திப்பு:கவன் என்கிறார் நாமல்!



இந்திய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அவசரமாக அழைத்து பேசியுள்ளார்.

சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம்.

ஆனால் தேர்தலுக்கு சற்று முன்னர் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள் தொடர்பில் கவனம் கொள்ளவேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசநாயக்க 13வது திருத்த சட்டத்தை அமுல் படுத்த ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments