ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு கிளிநொச்சி காசு!
ஜனாதிபதி தேர்தல் நடக்குமா? இல்லையாவென்ற கேள்விகள் ஒருபுறமிருக்க தேர்தல் செலவிற்கென பண வசூலில் கிளிநொச்சியில் திணைக்களங்கள் குதித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செலவிற்கென நிதி சேகரிக்குமாறு கூறியே வசூலில் குதித்துள்ளன வனவளத்திணைக்களமும் இலங்கை காவல்துறையும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ள காட்டுப்பகுதிகளாக மண்டைக்கல்லாறு மற்றும் குடமூரூட்டி பகுதிகள் உள்ளன.
அங்;கிருந்து மரங்கள் அனைத்தும் ஏற்கனவே தறிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ள நிலையில் தற்போது பாரிய மணல் கொள்ளை அரங்கேற தொடங்கியுள்ளது.
பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய வனவள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சகிதம் மணல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பகிரங்கமாக தொடரும் மணல் கொள்ளை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஜனாதிபதி தேர்தல் செலவிற்கு நிதி வசூலிக்க கொழும்பிலிருந்து மேல்மட்ட அறிவித்தல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவிற்கென நிதி சேர்த்து அனுப்பவே மணல் வியாபாரத்தை பகிரங்கமாக நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வனவளத்திணைக்கள மற்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அண்மையில் கிளிநொச்சி வருகை தந்து திரும்பியுள்ள நிலையில் மும்முரமாக வனவளத்துறை மற்றும் காவல்துறையினர் மணல் வியாபாரத்தில் குதித்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
நாள் தோறும் இரவு பகலாக வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்க மணல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏற்றிச்செல்லப்படுவதாக உள்ளுர் மக்கள தெரிவிக்கின்றனர்.
பெருமளவு வாகனங்கள் யாழ்ப்பாணம் நோக்கியே பயணித்துவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Post a Comment