பொதுவேட்பாளர்:தெற்கில் பீதியா?



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வடக்கின் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியான அபிலாசைகள் காணப்படுகின்றன.அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளனர் எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி தீர்மானித்திருந்தன.

அதற்கமைய தமிழ் தேசிய கட்சிகளை சந்தித்து சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுக்களை நடாத்திவருகின்றனர். 

இந்நிலையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் குறித்து சிங்கள அரசியல் தலைவர்களின் அச்சமே தற்போது வடக்கு நோக்கி அவர்கள் படையெடுப்பதற்கான காரணம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.


No comments