தமிழரசு தலைவரா??-சாத்தியமில்லை சுமா!


 

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தற்போதைக்கு இடம்பெறுவதற்கான சாத்தியமில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தலைவர் தெரிவு மீண்டும் இடம்பெற்றால் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிடுவாரா? ஏன்ற கேள்விக்கே தேர்தல் நிச்சயமின்மை பற்றி எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்போகும் நிலைப்பாடு பற்றி தீர்மானித்திருக்கவில்லை.ஆனால் ஜனாதிபதி தேர்தல் எப்போது என்பதே தெரியவில்லை.அவ்வாறிருக்கயிருக்கையில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு மீண்டும் தற்போதைக்கு இடம்பெறுவதற்கான சாத்தியமில்லையென தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க புலிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.அதனாலேயே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி ஏற்பட்டிருந்தது.இதனை சொல்வதால் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார்கள் என பயந்து நான் உண்மையை சொல்வதற்கு பயந்ததில்லையெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது 2005ஆண்டில் தேர்தலில் வாக்களிக்காமல் விடுத்தமை தொடர்பில் தமிழ் மக்கள் வருந்துவதாக தெரிவத்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. 



No comments