எம்.ஏ.சுமந்திரன்,சித்தார்த்தன் :அழையாவிருந்தாளிகளா?

 


ரணிலின் வடக்கிற்கான பயணங்களில் பங்கெடுக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோரை அழையாவிருந்தாளிகளாக கருதிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் கிளிநொச்சியிலும் ஜனாதிபதி ரணிலின் நிகழ்வுகளில்  எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் இருவர் மட்டுமே கூட்டமைப்பு சார்பில் பங்கெடுத்திருந்தனர்.கிளிநொச்சியில் சி.சிறீதரனோ யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்கினேஸ்வரனோ நிகழ்வுகளை புறக்கணித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி விஜயத்தில் ஆளுநர் எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் பங்கெடுத்த எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு முற்றாக இருட்டடிப்பு செய்திருந்தது.

ஊடகங்களிற்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திகள்,புகைப்படங்களில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் கத்தரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பயணங்களில் பங்கெடுக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோரை அழையாவிருந்தாளிகளாக கருதிவருகின்றமை அம்பலமாகியுள்ளது.


No comments