தமிழீழ பாராளுமன்றில் ரணில் உரை!
ஜனாதிபதி பணி நிமித்தம் வருகை தந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் கூடாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் ரணிலிற்கு வாக்களிக்க தவறிய தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய தவறை கைவிடமாட்டார்களென பிரச்சார களமிறங்கிய எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் கிளிநொச்சியில் தமிழீழ நீதிமன்ற கட்டடத்தொகுதியில் பணி நிமித்தம் வருகை தந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் கூடாதென தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட போதும் பின்னர் செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டதாக கூறப்படும் தமிழீழ நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பொதுமக்களிற்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
அங்கு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்கள் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளை கண்டுகொள்வதில்லையென தெரிவித்ததுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்து ஆதரவளிக்க கோரியிருந்தார்.
அவரை தொடர்ந்து உரையாற்ற வந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் 13ம் திருத்த சட்டத்தின் கீழான காணி அதிகாரம் மாகாணசபைகளிற்கு வழங்கப்படவேண்டுமென கோரியதுடன் காணி உரிமம் வழங்குவது போன்ற ஜனாதிபதியின் பணி நிமித்தமாக நிகழ்வுகளை தேர்தல் பரப்புரையாக கடைப்பிடிக்க கூடாதென கேட்டுக்கொண்டார்.
இதனிடையே எம்.சு.சுமந்திரனின் உரையினை தான் அறிந்த ஆங்கிலத்தில் அமைச்சர் டக்ளஸ் மொழி பெயர்க்க முற்பட நிலைமையினை புரிந்த கொண்ட அவர் தனது உரையினை தமிழ்,ஆங்கிலமென இரு மொழிகளிலும்; முன்னெடுத்திருந்தார்.
Post a Comment