குரஜாத்தில் தீ விபத்து: 27 பேர் பலி!!


இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில் கேளிக்கை விளையாட்டு இடத்தில் (gaming arcade) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 247பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தின் மேற்கு மாநிலமான ராஜ்கோட்டில் உள்ள கட்டிடத்தில் தீப்பிழம்புகள் மற்றும் பெரும் புகை மூட்டம் வானத்தை நோக்கி எழுவதைக் காண முடிந்தது.

இதுவரை 24 உடல்கள் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது தீ கட்டுக்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எரிந்த உடல்களை அடையாளம் காணுவது மிகவும் கடினமாக இருக்கும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஆர்கேட் பகுதியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களால் அதிகளவு கூடியிருந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.

ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் தான் தனது எண்ணங்கள் இருப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


 

No comments