இத்தாலியில் அணையில் வெடி விபத்து: பலர் உயிரிழப்பு!!


இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள நீர்மின் நிலைய அணையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். இத்தகவலை உள்ளூர் நகரசபை மேயர் இன்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்தார்.

இந்த வெடிவிபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேரைக் காணவில்லை, மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அருகிலுள்ள நகரமான கமுக்னானோவின் நகரசபை மேயர் மார்கோ மசினாரா கூறினார்.

தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டடுள்ளனர். தொடர்ந்தும் காணாமல் போனவர்களைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

போலோக்னா மற்றும் புளோரன்ஸ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள சுவியானா ஏரியின் அணையில் ஏற்பட்ட வெடிப்புக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அணை எரிசக்தி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அதிகாலையில் அதன் மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விசையாழிகள் வேலை செய்யும் போது பூமிக்கு அடியில் ஒன்பது மட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அணையின் பள்ளத்தாக்கு சேதமடையவில்லை என்றும், சம்பவத்தின் போது ஆலை ஆஃப்லைனில் இருந்ததால் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அணை இயக்குவர்கள் கூறினர்.

சுவியானா ஏரி 500 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் அப்பெனின்ஸில் உள்ள ஒரு பிராந்திய பூங்காவில் அமைந்துள்ளது. 

இது 1928 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளில் அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.

No comments