72 பேர் அந்த சிறப்பு முகாமில்!என் இனத்திற்காக சுமை தாங்குவது எமது கடமை :ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் ஒன்றரை ஆண்டுகள்  திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலையான   ஈழத் தமிழர்கள்   முருகன், பயாஸ், ஜெயக்குமார்   ஆகியோருடன் இலங்கை சென்று அவர்களுடைய உறவினர்களோடு  சேர்த்து வைத்த வரலாற்றுக் கடமையை எனக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி.  எங்கள் பயணம் இனிமையானதை தொடர்ந்து  இன்று மாலை  (9.4.24-  செவ்வாய்   கிழமை )தமிழீழத்தில்  இருந்து  தமிழ்நாடு நோக்கி திரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்.

இந்திய முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்  சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலையே சாந்தன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். ஏனைய மூவரும் கடும் போராட்டத்தின் மத்தியில் கடந்த வாரம் நாடு திரும்பி இருந்தனர். 

இந்நிலையில் இன்னமும் 72 பேர் அந்த சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் அரசியல்வாதிகள் திருச்சி வந்து அந்த சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு , அங்குள்ளவர்களை மீட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்

No comments