புதையல் வேட்டைகள் ஓயவில்லை!
திருகோணமலை மொரவெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு(11) 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment