ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி இஸ்ரேலின் தாக்குதலில் பலி!


தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா இராணுவப் பிரிவின் துணைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து எல்லை தாண்டிய தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. 

தெற்கு லெபனானின் Bazuriyeh இல் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ரொக்கட் பிரிரின் துணைத் தலைவர் அலி அப்தெல் ஹசன் நைம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஆளில்லா விமானம் இவர் மகிழுந்து மீது தாக்குதல் நடத்தியதில்  கொல்லப்பட்டார்.

இவர் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கும் திட்டமிடுவதற்கும் பொறுப்பான தலைவர்களில் ஒருவர் என இஸ்ரேல் இராணுவம் கூறியது.

No comments