செங்கடலில் ரஷ்யாவின் போர்க் கப்பல்கள்: பதற்றத்தில் செங்கடல் பகுதி!


ரஷ்யாவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் போர்க் கப்பல்கள் பாப்-எல் மண்டேப் ஜலசந்தியைக் கடந்து செங்கடலுக்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியது. இதனால் அப்பகுதியல் பதற்றம் நிலவியது.

ரஷ்யாவின் கடற்படைகப் படையின் இப்பிரில் ஏவுகணைக் கப்பலான வர்யாக் மற்றும் போர்க்கப்பல் மார்ஷல் ஷபோஷ்னிகோவ் ஆகியவை அடங்கும் ஷ்ய பசிபிக் கடற்படையின் செய்தி சேவையை மேற்கோள் காட்டி டாஸ் செய்தி வெளியிட்டது.

இப்போர்க் கப்பல்கள் ஏன் செல்கடலை நோக்கி விரைந்தன என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிய வரவில்லை.

ஏமனைத் தளமாகக் கொண்ட ஹூதிப் போராளிகளின் காசாவில இஸ்ரேல் படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கும் அதற்குத் துணைபோகும் மேற்கு நாடுகளின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹூதிகள் கூறுகின்றனர். இதனால் அக்கடல் பகுதியில் மேற்கு நாடுகளின் போர்க் கப்பல்களால் நிரம்பியுள்ளன. அவர்கள் ஹூதிகள் மீது கடலிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மேற்கு நாடுகளின் தாக்குதலுக்கு அஞ்சாது ஹூதிகள் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து கடற்படைக் கப்பல்கள் நிரம்பியுள்ளன. ஏற்கனவே சீனாவின் ஒது கப்பல் அங்கு தரித்து நிற்கிறது. 

தற்போது ரஷ்யாவும் தனது போர்க் கப்பல் தொகுதியை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

No comments