வடகொரியா மீதான தடைகளை ரஷ்யா வீட்டோ மூலம நிறுத்தியது


வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஐநா நிபுணர்கள் குழுவை தொடர்ந்து செயற்படுவதை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்குழுவைக் கலைத்துள்ளது.

உக்ரைனில் பயன்படுத்துவதற்காக வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை ரஷ்யா வாங்கியதன் மூலம் விதிகளை மீறியதாக வெளியான செய்திகளை விசாரித்து வருவதாகக் குழு கடந்த வாரம் கூறியது.

2006 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத் திட்டத்தை முடக்குவதற்காக வடகொரியா மீது ஐ.நா.வின் பாதுகாப்பு சபை தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. ஆனால் மீறல்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இப்போது கலைக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக் குழுவை தொடர்ந்து செயற்படுவதை தடுத்தது.

வாக்கெடுப்பில் 14 நாடுகள் பங்கெடுத்தன. இதில் 13 நாடுகள் விசாரணைக் குழு தொடர்ந்து செயற்பட வாக்களித்தன. சீனா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ரஷ்யா இக்குழு தொடர்ந்து செயற்படக்கூடாது என வீட்டோ மூலம் தடுத்தது.

14 ஆண்டுகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் இந்தக் குழுவை ரஷ்யா தடுப்பது இதுவே முதல் முறை.

ரஷ்யாவின் தடையானது அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து கண்டன அலையைத் தூண்டியது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா கண்காணிப்பு குழுவை அமைதிப்படுத்துகிறது என்றன. ஏனெனில் வடகொரியா மீது போடப்பட்ட தடைகளை ரஷ்யா மீறியதாக அறிக்கை செய்யத் தொடங்கியது. அத்துடன் குறிப்பாக உக்ரைனில் உள்ள போர்க்களங்களுக்கு வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது என உக்ரைனும் மேற்குலக நாடுகளும் குற்றச்சாட்டி வருகின்றன.

No comments