போர் நிறுத்த புதிய சுற்றுப்பேச்சுக்கு ஒப்புதல் அளித்தார் இஸ்ரேல் பிரதமர்


இஸ்ரேலிய பிரதமர் பின்யாமின் நெதன்யாகு எகிப்து மற்றும் கத்தாருக்கு தூதுக்குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்டார். அங்கு காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தையாளர்கள் முயற்சித்து வருகின்றனர் என்று அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களான ஷின் பெட் மற்றும் மொசாட்டின் தலைவர்களுடன் அவர் பேசியதாகவும், வரவிருக்கும் நாட்களில் டோஹா மற்றும் கெய்ரோவிற்கு அவர்களின் சார்பாக பிரதிநிதிகள் குழுக்கள் செல்வதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் நெதன்யாகுவின் அலுவலகம் கூறியது.

No comments