பிக்கு சரணம் கச்சாமி!

 



இலங்கையில் தொடர்ந்தும் பௌத்தத்திற்கே முன்னுரிமையென்பதில் தெற்கு தெளிவாகவே இருந்துவருகின்றது.

எனினும் இலங்கை ஜனாதிபதியோ மதகுருமார்கள் அனைவரும் சமமானவர்களே. இங்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது. அனைவரையும் சமத்துவமாக நோக்கவேண்டும். அதுவே இன, மத நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும என கூறிவருகின்ற போதும் தொடர்ச்சியாக இவ்வாறான ஏற்றத்தாழ்வு போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை(17.03.2024) கிளிநொச்சியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் பௌத்த மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்களுடைய குருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் வெறுமையாக காணப்பட்டமை கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பக்தர்கள் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டேயுள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச்சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றுள்ளது . 




No comments