வட்டுக்கோட்டை காவல்துறை:அடங்கியபாடாக இல்லை!
பொதுமகன் ஒருவரை சித்திரவதை மூலம் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை மற்றுமொரு பல்கலைக்கழக மாணவனை சித்திரவதைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை காவல்துறையின் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியதாக மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் , கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட காவல்துறையினர்; எவ்வித விசாரணைகளும் இன்றி தன்னை வீதியில் வைத்து கடுமையாக தாக்கியிருந்ததாக கருணாகரன் நிதர்சன் தெரிவித்துள்ளார்.
பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்று, காவல் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள்; கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள்.
எவ்வித குற்றமும் இழைக்காத தன்னை மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்ய முற்பட்டதாகவும் கருணாகரன் நிதர்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment